Tuesday, July 18, 2006

மதுமிதா... மதுமிதா....

மதுமிதா அவர்களின் ஆய்விற்காக :


எல்லாரும் குறிப்பிட்ட நேரத்துல குடுத்துட்டாங்க... சில பல விஷயங்களால என்னால் உடனடியா தர இயலவில்லை. இந்த பதிவை இனைக்க இன்னும் நேரம் இருந்தால் என்னுடைய பதிவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

வலைப்பதிவர் பெயர்:

ஜீவா (ஜீவ்ஸ்) என்கிற ஐயப்பன்

வலைப்பூ பெயர் :

எண்ணங்களும் எழுத்துகளும் , இயன்றவரையிலும் இனியதமிழில் மற்றும் கடுவெளி

உர்ல் / சுட்டி :

http://payananggal.blogspot.com , http://kaduveli.blogspot.com , http://iyappan.blogspot.com

வாழ்விடம் / ஊர் :

பிறந்தது வாழியூர் எனும் கிராமம். வேலூரில் இருந்து கிட்ட தட்ட 35 கிலோ மீட்டர் தொலைவு.
தற்போதைய வாசமும் சுவாசமும் பெங்களூரில் தான்

பிறந்த பொன்நாடு:

இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:

நமக்கு நாமே.. தன் கையே தனக்குதவி என்று மிகவும் நம்பிக்கையாய் ஆரம்பித்தது.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :

முதல் முதலில் பதிவெழுதி போட்டது 11/21/2003 .

இது எத்தனையாவது பதிவு:

எண்ணங்களும் எழுத்துகளும் - 31 ( இந்தப் பதிவையும் சேர்த்து ),
கடுவெளியில் - 6,

இயன்றவரையிலும் இனியதமிழில் - 30

இப்பதிவின் உர்ல் / சுட்டி : http://iyappan.blogspot.com/2006/07/blog-post.html


வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

தாளில் எழுதுவது எதையும் அவ்வப்போதே கிழித்துப் போடும் ஒரு பழக்கம் இருந்தது. சில சமயம் கிழித்துப் போடாதவற்றை எடுத்துப் படிக்கும் போது அட என்று தோன்றும் ( நெனப்பு தான் பொழப்பை கெடுக்குமாம் :)) ) .. சரி எழுதியதை இணையத்தில் போட்டு வைக்கலாம் என்று ஆரம்பித்தது தான்.

இணையத்தில் அதுவும் தமிழ்கவிதை குழு என்று ஒன்று ஆரம்பித்து பின் இராயர் காபி கிளப் / மரத்தடி என்ற குழுமங்களில் முடிந்தது. பின்பு நமக்கென தனியாய் ஒரு இடம் இருந்தால் நல்லது என்று http://iyappan.net என்று ஒரு வலைதளம் ஆரம்பித்து அதை தொடர்ந்து பராமரிக்காமல் போனதால் அது போயே போச்சு. அவ்வளவு காசு கொடுத்து அவஸ்தை படுவானேன் என்று வலைப்பதிவு ஆரம்பித்து விட்டேன்.

சந்தித்த அனுபவங்கள்:

பற்பல நல்லனுபவங்களும் .. சற்றே வேறுமாதிரியான அனுபவங்களும் உண்டு..

" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் ".

தீமைகளை விட நன்மைகள் அதிகம்


கிடைத்த நண்பர்கள்:

மிக அதிகம்.

கற்றவை:

எப்போ கற்றேன் ?? கற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் தான் :)

போற்றுவார் போற்றட்டும் புழுது வாரி
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
உற்றதொரு கருத்தை எனதுள்ளமெனில்
எடுத்து சொல்வேன்
எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் !!

இது தாங்க எனக்கு இணையத்தில் கிடைத்த எழுத்து சுதந்திரம்


இனி செய்ய நினைப்பவை:

இயன்றவரையிலும் இனியதமிழில் எழுதவும் பேசவும் முயல்வது

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:


பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழகம் என்றாலும் தற்சமயம் இருப்பது பெங்களூர். வேலை செய்வது யாஹூ என்கிற பன்னாட்டு நிறுவனத்தில். வயது முப்பத்தோரு அகவைகள் முடிய போகிறது இந்த டிசம்பரோடு.
மற்றபடி என்னைப் பற்றி சொல்ல அதிகமில்லை.


இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

படித்து முடித்ததும் வேலை கிடைக்கும் என்று ஆரம்பித்து பின் துவண்டு சில நேரம் காசில்லாமலும் வேலை செய்து, சில நேரம் செய்யா தவறுக்கும் தண்டனை பெற்று இருந்த போதிலும் எனக்கு வாட்டம் நீக்கி மனதை மகிழச் செய்த தமிழுக்கு நன்றி.

அன்புடன்
ஐயப்பன்

4 comments:

Anonymous said...

//தற்போதைய வாசமும் சுவாசமும் பெங்களூரில் தான்//

எம்பூ, நாங்களெல்லாம் மட்டும் என்ன? வாசம் ஒரு இடம் சுவாசம் இரு இடமுன்னா அலையறோம்? சும்மா அடுக்குத் தமிழில் எழுதறதுன்னா என்ன வேணா எழுதறதா? என்ன அக்குரும்பு இது? : D

posted by: இ.கொ.

Anonymous said...

ஆகா.. இப்படி வேறயா.. ஐயப்பன், ஜீவா ரெண்டும் ஒரே ஆளா? இதுல நீங்க வலை பதிவுக்கு வருவதே ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒருதரம் தான்.. இதுல இத்தனை வலைப்பூ வச்சிருந்தா எப்படி முடியும்? ;)

ம்ம்.. இந்த முறை வலைக்கு வந்ததுக்கும்.. மத்ததுக்கும்.. நம்ம வாழ்த்துக்கள்.. மது புத்தகத்துல பிற்சேர்க்கை போட்டு சேர்த்துக்கிடறாங்களாமா?

ஐயப்பன் தான் ஜீவான்னு ஆகிடுச்சு.. இந்த தொல்காப்பியத்தை இப்படி விளக்கணுமா? கொஞ்சம் ஜாலியா, சரசுவையும் கமலாவையும் கூட்டிகிட்டு வரலாம்ல?

posted by: பொன்ஸ்

Unknown said...

ஆகா.. இப்படி வேறயா.. ஐயப்பன், ஜீவா ரெண்டும் ஒரே ஆளா? இதுல நீங்க வலை பதிவுக்கு வருவதே ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒருதரம் தான்.. இதுல இத்தனை வலைப்பூ வச்சிருந்தா எப்படி முடியும்? ;)
///

எழுதனும்னு தோன்றது.. ஆனா எப்படி எழுதறதுன்னு தெரியலையே ......

( சிவாஜி ஸ்டைல்ல படிச்சுக்கோங்க :P )

ம்ம்.. இந்த முறை வலைக்கு வந்ததுக்கும்.. மத்ததுக்கும்.. நம்ம வாழ்த்துக்கள்.. மது புத்தகத்துல பிற்சேர்க்கை போட்டு சேர்த்துக்கிடறாங்களாமா?
///

நன்றி நன்றி... மெஸேக் கிடைச்சதா ?


ஐயப்பன் தான் ஜீவான்னு ஆகிடுச்சு.. இந்த தொல்காப்பியத்தை இப்படி விளக்கணுமா? கொஞ்சம் ஜாலியா, சரசுவையும் கமலாவையும் கூட்டிகிட்டு வரலாம்ல?
///

அதையேன் கேக்கறீங்க... அவுக வெண்பாவுக்கு மட்டும்தேன் வருவேன்னுட்டாவுக.. சரி சுப்பன் குப்பன் யாராவது கிடைக்காமலையா போய்டுவாங்க... பாத்துக்கிடுவோம்.. இனிமே

Unknown said...

எம்பூ, நாங்களெல்லாம் மட்டும் என்ன? வாசம் ஒரு இடம் சுவாசம் இரு இடமுன்னா அலையறோம்? சும்மா அடுக்குத் தமிழில் எழுதறதுன்னா என்ன வேணா எழுதறதா? என்ன அக்குரும்பு இது? : D

////

என்னப்பா செய்யறது.. நமக்கு தெரிஞ்சது அது தானே :D