Sunday, July 17, 2005

சாமிபூதம்

சாமிபூதம்
*********
இவை யாவும்
பேசாத
உயிரற்ற பிம்பங்கள்

உங்களுக்கு தெரியுமா
இவை முன்
வாய்விட்டு கதறி
இருக்கிறேன்

புராணங்களும் குரானும்
சொல்வதுவெறும்
வார்த்தைகள்

வார்த்தைகள் கொண்ட
திரை விலகிய பின்தான்
உண்மையை நானும்
அறிந்தேன்
**
கபீர் தாசர்

3 comments:

Anonymous said...

அருமை.. அருமை.. அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

posted by: மூர்த்தி

Anonymous said...

நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்டம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லு மந்த்ரமேதடா
நட்ட கல்லும் பேசுமோ... நாதன் உ(ன்னு)ள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?!

ஒரு சித்தர் பாடி வைத்தது

posted by: S.Sankar

Anonymous said...

சங்கர்,

அதை எழுதியவர் சிவ வாக்கியர். அவருடைய பாடல்கள் படிப்பதற்கு எளிமையும் கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் அதில் உண்டு.

அன்புடன்
ஐயப்பன்

posted by: Iyappan K