Monday, February 23, 2004

Mudivu

உணர்வுகள் மறத்து
உண்மைகள் மறைத்து
நினைவுகள் தன்னில்
தடைகளை இட்டு
கனவுகள் அனைத்திற்கும்
நெருப்பினை இட்டு

நிகழ்வுகள் மறந்து
நினைவுகள் வெறுத்து
வேளை தோறும்
வேலைத்தேடி களைத்த
மனதில் வலியில்
வாழ்க்கை பயணம்

இதுதான் முடிவு
வாழ்வின் முடிவு
கணக்கை தொடங்கிய
இறைவனை தேடும்
கால் கடுக்காத
நெடிய பயணம்

உச்சி பாலத்தில்
உயிரின் ஊசல்
கடைசி காசாய்
ஒரே ஒரு ரூபாய்
என்னதந்த கூட்டம்
எட்டிப் பார்க்கையில்
வாயினால் ஓவியம்
வார்த்தது குழந்தை

எறிந்த காசு ஒரு ரூபாய்
அத்துடன் எறிந்து வைத்தேன்
எந்தன் இயலாமையை
வாழதுவங்கினேன் இனி
வானமே எல்லை

No comments: