*********************
"தாயே என்ற தனயனைத்
தனிமையிலே போ போவென
தள்ளியதும்
பேயோன் வந்ததும்,
மாயம் செய்து என்னைக் கவர்ந்த
தீயோன் செயலதை நீ தடுத்திட
இயலாமல் செய்ததும்
என்னுடைய பிழைதான்
அண்ணலைத் தேட நீ
இவ்விடம் அகன்றிலோ
அக்கினிக் குளியல் செய்குவேன்
இக்கணம் நானுமென்று
சொன்னதால் வந்தது..
பின்னாளில் நடந்தது..
உம்பரில்லா காடதிலே
வம்பனிடம் சிக்கிடாமல்
உயிர் தனை காத்துவந்தேன்
உற்றவன் வருவானென்று!!
கற்பினுக்கோர் கறைதனை என்மேல்
கொற்றவன் கற்பிக்கலாமோ
இற்றது என் மனமது.. மகனே
உடலதும் வாழ்ந்து செய்வது என்ன
பிறரது வார்த்தையில் வேகுமுன்னே
எரிதழல் கொண்டு நீ
இடுக தீ இளையவ!" என்றாள்
ooo
Wednesday, April 28, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment