Wednesday, April 28, 2004

unaiththEdi

***************************

எங்கிருந்தாலும் உனைப்
பார்க்கும் விழிகள்
சுவாசமும் வாசமும் எனக்காய்
என உணர்த்தும் உன் புன்னகை

உனைத் தானே தேடினேன்
இத்தனைக் காலமும்
உருவமற்ற காற்றாய்
திரிந்து கிடந்த உன்மத்த மனதை...
உயிர் கொடுத்து
உனக்கெனவே வாழவைத்தாய்

உனைக்கண்டு ஆனந்தம்
ஊற்றாய் பெருகினாலும்
உனைச்சேர வாய் நெருங்கும் நேரம்
உற்றுப் பார்க்க, தெரிகிறது-
சாதிமதக் கண்ணாடிச் சுவர்

போதும் என்றேன்
புறப்பட மறுக்கிறாய் மனதை விட்டு
ஆகாது என்ற பின்னும்
ஆகாசம் போலவே விரிகிறாய்
என்னுள்ளே எத்தனை நாளுக்கு
இத்தனை வதைகள்?

கல்லாய்க் கிடந்தவனைக் கடவுளாய்ச்
சிலைவடித்தாய் உன் நேசத்தால்
சிலை வடித்த பின் மேலும் மேலும்
உளி கொண்டு ஏன் செதுக்குகிறாய்?

உடைந்து போனச் சிலை என்றும்
விலை போகாது....
அறியலையே நீ இன்னும்

ooo

No comments: