*************
யார் கடவுள்?
-------------
மனிதனை படைத்தவன் நீதான் என்றால்
உன்னை படைத்தவன் யாரெனெ கேட்டேன்
கடவுள் என்பது சுயமற்ற வடிவம், என்னை
சுயம் தந்து படைத்தவன் மனிதன் என்றான்
கடவுளை படைத்த மனிதனை பார்த்து
கடவுள் என்பது யாரென கேட்டேன்
கடவுளை படைத்தது நானே அதனால்
கடவுள் என்பதும் நானே என்றான்
ஆணவ நெஞ்சில் கடவுளை தேடி
அழிந்து மறைந்தோர் ஆயிரம் கோடி
கடவுளை உணர்ந்து அறிந்தவர் யாரோ?
உடனே வந்து சாட்சி சொல்லாரோ?