Thursday, June 03, 2004

oru maunaththin kural

ஒரு மௌனத்தின் குரல்
*****************

எத்தனை நாளிங்கோ
எனக்குத் தெரியாது
எத்தனை நாளிவள் எனை சுமப்பாள்
அதுவும் புரியாது

வெளிவாழ்தலில் தான்
வேதனையென்பீரோ
வெளிவரும் நாள் வரையும்
வேதனை அதிகமென்பேன்

இன்றோ நாளையோ
என்றோ ஒரு நாள்
கருவுள் உருவாகும் நான்
வெளிவரும் முன்னே

உள்ளில் கரைந்து உயிர்
பிரியவும் நேரலாம் அன்றில்
வெளிவந்த நாளில் விதை நெல்லை
முத்தமிட்டோ விடைப் பெற நேரலாம்

உத்த்தரையின் கருக் கொல்ல
ஓரத்திரம் தான் எய்தது அன்று
எங்களின் உயிர் கொள்ள
எய்யப் படுகின்றது எண்ணற்ற அத்திரங்கள்

கண்ணன் எனும் வேந்தனனும்
காத்தான் அவ்வுயிரை அன்று
எங்களையும் காக்க தேடியலைகிறோம்
ஒரு கார்மேகவண்ணனையின்று
************************



அன்புடன்
ஐயப்பன்

No comments: