Thursday, June 03, 2004

samudhira kumari

************************
சமுத்திர குமாரி
-------------
என்னுள்ளே உனைக் கண்டேன் உன்மத்தம் மிகக்கொண்டேன்
உண்மை அறிந்தும் உள்ளம் உன்மீதே நாடக்கண்டேன்
கள்ளம் இல்லையடா எந்தன் பாழும் மனதுக்கு
கல்வியும் இல்லையடா இந்த பேதை பெண்ணுக்கு

நாட்டுக்கு அரசன் என்றே ஊரார் உனை பாராட்ட
என்னரசன் நீயென்று என்னுள்ளம் உனை தாலாட்ட
மெலிதான எச்சரிக்கை என் உள்ளே பயம் காட்டும்
என் நிலையை அது எண்ணி உனைமறக்க வழிகாட்டும்

பிறிந்து செல்லவோ கண்ணா நீயற்ற இடம் தேடி
மறைந்து செல்லவோ நானும் கடலரசன் மடிதேடி
இரண்டு பக்கம் இடிகொள்ளும் மத்தளமாய் மாறிப்போனேன்
இறைவன் எனை கொண்டு செல்லும் நாளுக்காய் வாடிப்போனேன்

உனை விட்டு சென்று விட்டேன் வெகு தூரம் அலைமீது
எங்கிருந்தும் உனையெண்ணும் என் மனதை கொல்ல வழியேது
ஆழ்க்கடலும் ஓய்ந்திருக்க அகக்கடலும் பொங்குவதேன்
நிலமகளும் துயிலையிலே என் நெஞ்சமதும் விம்முவதேன்.

--
அன்புடன்
ஐயப்பன்

No comments: